தக்கலை ஜூன் 28: திருவிதாங்கோடு முஸ்லிம் கலை கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு குழு சார்பாக சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு கருதரங்கம் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் முகமது அலி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் எட்வின் ஷீலா முன்னிலை வகித்தார்.
போதை பொருள் விழிப்புணர்வு குறித்து ஆண்டனி கிளிட்டஸ் ராஜ் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.