வலங்கைமான், ஜூன் 27: வலங்கைமான் வட்டாரத்தில் தூய்மை பாரத இயக்கம் மத்திய ஆய்வுக் குழு வருகையை முன்னிட்டு ஊராட்சி செயலர் மற்றும் திட்டஒருங்கிணைப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
வலங்கைமான் வட்டாரத்தில் தூய்மை பாரத இயக்கம் மத்திய ஆய்வுக் குழு வருகையை முன்னிட்டு திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்வது மற்றும் கண்காணிப்பது தொடர்பாக வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் கலந்தாய்வு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற காந்தாய்வு கூட்டத்தில் ஊராட்சி செயலர்கள்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சுகாதார ஊக்குனர்கள் கலந்து கொண்டனர்.