முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.கே.ராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அலுவலர்களாக வட்ட வழங்கல் அலுவலர் வசுமதி, வேளாண்மைத்துறை அலுவலர் பிரசன்னாபதி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்னபூரணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். தொடர்ந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.அப்போது முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகையும், அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தையும் கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மத்தியில் கிராம சபை கூட்டத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவருக்கும் மரக்கன்றுகள் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், துணைத் தலைவர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.