திருவாரூர், ஜூன் 18:திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாணவ-, மாணவிகளின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் -2 முடித்த மாணவ, -மாணவிகள் மருத்துவம், என்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல், துணை மருத்துவம், தொழிற்பயிற்சி உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகள் மற்றும் கல்லூரிகள் தொடர்பான சந்தேகங்கள் குறித்தும் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள், அவற்றில் உள்ள பாடப்பிரிவுகள் அவற்றின் காலியிடங்கள் சார்ந்த விபரங்கள், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்து அறிந்துகொள்ளவும் இந்த கட்டுப்பாட்டு அறைஅமைக்கப்பட்டுள்ளது. எனவே இதில் மாணவ, -மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் திருவாரூரில் நாளை உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
0