திருத்துறைப்பூண்டி, ஆக. 23:திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த டிஎஸ்பி சோமசுந்தரம் தஞ்சாவூர் நகர டிஎஸ்பியாக பணி மாறுதல் பெற்று திருவாரூரில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வந்த பாஸ்கரன் பணிமாறுதல் பெற்று திருத்துறைப்பூண்டி டிஎஸ்பியாக பாஸ்கரன் பொறுப்பேற்று கொண்டார். பொறுப்பேற்றுக்கொண்ட புதிய டிஎஸ்பிக்கு காவல் ஆய்வாளர் மாரிமுத்து, காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார், பயிற்சி எஸ்ஐ திருமலை குமார் உள்ளிட்ட காவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்