மன்னார்குடி: இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மன்னார்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாதவிடாய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் மணவழகன் தலைமை வகித்தார். மகளிர் நல மருத்துவர் சூர்யா முன்னிலை வகித்தார். இதில், மகளிர் நல மருத்துவர் சித்ரா செல்வமணி பேசியதாவது: மாதவிடாய் என்பது பெண்களின் இனப்பெருக்க சுழற்சி இயல்பு. மாதவிடாய் ஏற்படுவதை பிரச்னையாகவோ, தீட்டாகவோ கருதக் கூடாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் சீராக தவறாமல் மாதவிடாய் ஏற்பட்டால் அந்த பெண்ணின் உடல் நலம் சரியாக உள்ளது என அர்த்தம்.
திருவாரூர் தற்போது வரை 60 சதவீதம் சாகுபடி மாதவிடாயை பிரச்னையாகவோ, தீட்டாகவோ கருதக் கூடாது விழிப்புணர்வு கருத்தரங்கில் மருத்துவர் அறிவுறுத்தல்
97