திருவாரூர், ஜுன் 27: திருவாருர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026 ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முழுநேர பட்டயப் பயிற்சி வகுப்புகள் சேர்க்கை கால நீட்டிப்பு தொடர்பாக திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் திரு.செ. இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர விரும்பும் மாணவர் சேர்க்ககைக்கான குறைந்தபட்ச கல்வி தகுதியாக +2 தேர்ச்சி அல்லது SSLC தேர்ச்சியுடன் 3 வருட பட்டயப்படிப்பு (Diploma) தேர்ச்சி (10+3) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இப்பயிற்சியில் சேர www.tncu.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரருக்கு 1.07.2025 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். மேலும், இவ்வகுப்புகள் இரு பருவங்களாக நடத்தப்படும்.இணைய வழி முலமாக, விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100/- இணைய வழி முலமாக செலுத்த வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சான்றுகளில் சுய ஒப்பமிட்டு திருவாருர் கூட்டுறவு மேலாண்மை நிலையம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாருர் 610 004 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் முலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய காலம் 20.07.2025 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள், பயிற்சிக் கட்டணமாக, ரு. 20750/- (ஒரே தவணையில்) இணைய வழி மூலம் செலுத்த வேண்டும், என திருவாருர் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.