திருவாரூர், பிப். 21: திருவாரூரில் புதிதாக திறக்கப்பட்ட நெல் கொள்முதல் பணியினை நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் அற்புதராஜ்அருளப்பன் துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்டத்தில் நேற்று திருவாரூர் அருகே பழையவலம் கிராமத்தில் ரூ.62 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கான கட்டிடத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார். இதனையடுத்து இந்த புதிய கட்டிடத்தில் குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் பணியினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் துணை மேலாளர் அற்புதராஜ்அருளப்பன் துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ராஜா, ஊராட்சி செயலர் தனபாலன் மற்றும் கிராம பொறுப்பாளர்கள் அன்பானந்தம், செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தர் சபீர்அகமது, உதவியாளர் கமல, சுமைப்பணி தொழிலாளர் சங்க தலைவர் சேகர் உட்பட பலர் செய்திருந்தனர்.
திருவாரூரில் நெல் கொள்முதல் பணி நுகர்பொருள் வாணிப கழக மேலாளர் துவக்கி வைத்தார்
0