திருவாரூர், நவ. 13: திருவாரூர் மாவட்டம்கொரடாச்சேரியில் தலைமறைவாக இருந்து வந்த ரவுடிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரிபோலீஸ் சரகத்திற்குட்பட்ட கண் கொடுத்த வனிதம் மேல பருத்தியூரை சேர்ந்தவர் விக்கி என்கின்ற விக்னேஸ்வரன் (35). இதேபோல் கொரடாச்சேரி பெருமாளகரம் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய் (40). இருவரும் பிரபல ரவுடிகள். இருவர் மீதும் கொரடாச்சேரி போலீஸ் ஸ்டேஷன், திருவாரூர் டவுன் மற்றும் தாலுகா, மன்னார்குடி டவுன் மற்றும் குடவாசல் போலீஸ் ஸ்டேஷன் ஆகியவற்றில் அடிதடி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருகின்றன.
இந்நிலையில் இந்த வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் சரிவர ஆஜராகாமல் இருந்த இருவர் மீதும் பிடிகட்டளை பிறப்பிக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர். ரவுடிகள் இருவரும் நேற்று அம்மையப்பனிலிருந்து குளிக்கரைக்கு டூ வீலரில் சென்று கொண்டிருந்தபோது குறுக்கே நாய் ஒன்று வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இருவருக்கும் இடது காலில் முடிவு ஏற்பட்டது. இதனையடுத்து ரவுடிகள் இருவரும் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நிலையில் இது தொடர்பாக கொரடாச்சேரி போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.