திருவாடானை, செப்.2:திருவாடானை பகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக பாலங்கள் சாலைகள் நீர் வழித்தடங்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவாடானை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் உட்கோட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பாலங்களிலும் சிறிய விரிசல்கள் சரி செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு வருகிறது.
மேலும் பாலத்தின் வழியே தண்ணீர் செல்ல முடியாத நிலையில், உள்ள செடி கொடிகள் சீமை கருவேல மரங்கள் ஆகியவைகள் அகற்றப்பட்டு வருகிறது. இப்பணிகளை சாலை பணியாளர்கள் உதவியாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். இப்பணிகளை உட்கோட்ட பொறியாளர் சௌந்தர்ராஜன், இளநிலை பொறியாள ர்லட்சுமணன் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.