திருவாடானை, செப். 22: திருவாடானை அருகே சம்பூரணி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியா(35). இந்நிலையில் நேற்று பிரியா உள்ளூரில் நடைபெறும் 100 நாள் திட்ட வேலைக்கு சென்றுள்ளார். பிறகு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்து தங்க செயின், மோதிரம் உட்பட 5 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தத. இதுகுறித்து பிரியா கொடுத்த புகாரின் பேரில், திருவாடானை போலீசார் வழக்கு பதிவு செய்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.