திருவாடானை, செப். 6: திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் வாரச்சந்தை அருகில் உள்ள கிராம சேவை மையக் கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை மூலம் பெரியகீரமங்கலம், சின்னக்கீரமங்கலம், சேந்தனி, சானாவயல், திருவள்ளுவர்நகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.இந்த நிலையில் இந்த 4 கிராமப்பகுதிகளை உள்ளடக்கிய மையப்பகுதியில் உள்ள பெரியகீரமங்கலம் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித் தந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் பெரியகீரமங்கலம் ஊராட்சி கிராம சேவை மையம் அருகில் சுமார் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிட கட்டுமானப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவாடானை அருகே புதிய ரேஷன் கடை கட்டுமானப் பணி ஸ்பீடு
previous post