திருவாடானை, ஜூன் 3: திருவாடானை அருகே கட்டவிளாகம் பகுதியில் உள்ள விருசுழி ஆற்றுப்படுகையில் உரிய அனுமதியின்றி டிராக்டரில் ஆற்றுமணல் ஏற்றி வருவதாக திருவாடானை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவ்வழியாக வந்த டிராக்டரை வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அப்போது போலீசாரை கண்டதும் சுதாரித்துக் கொண்ட டிராக்டர் டிரைவர், அங்கேயே டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். அதன் பிறகு அந்த டிராக்டரில் உரிய அனுமதியின்றி ஆற்றுமணல் ஏற்றி வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆற்று மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து, தப்பி சென்ற டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.
திருவாடானை அருகே ஆற்று மணலுடன் டிராக்டர் பறிமுதல்
0