Thursday, February 29, 2024
Home » திருவாடானையில் புதர்மண்டிக் கிடக்கும் கழிவறையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவாடானையில் புதர்மண்டிக் கிடக்கும் கழிவறையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

by Karthik Yash

திருவாடானை,டிச.27: திருவாடானையில் உள்ள மங்களநாதன் குளத்தின் தென்கிழக்கு பகுதியில் கடந்த 2015-2016ம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிராம சேவை மைய கட்டிடமும், மகளிர் கழிவறை கட்டிடமும் கட்டப்பட்டு ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாடானை ஊராட்சி நிர்வாகம் சார்பில் இந்த கிராம சேவை மையக் கட்டிடத்தில் நடைபெறும் பல்வேறு கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அப்பகுதி மகளிர் மற்றும் முதியவர்கள் உட்பட ஏராளமான பெண்கள் இங்கு வந்து செல்லும்போது இயற்கை உபாதையை கழிப்பதற்காக அருகில் உள்ள மகளிர் கழிவறையை பயன்படுத்தி வந்துள்ளனர்.
மேலும் திருவாடானை ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு சுயஉதவிக் குழுவினர் சார்பில் இந்த கிராம சேவை மைய கட்டிடத்தில் மாதந்தோறும் நடைபெறும் கூட்டம், லோன்மேளா மற்றும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்து செல்லும் அப்பகுதி மகளிர் சுயஉதவிக் குழுவினர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அருகில் உள்ள மகளிர் கழிவறையை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராம சேவை மைய கட்டிடத்தின் அருகில் உள்ள மகளிர் கழிவறை கதவுகள் தாழ்ப்பாள் கழன்று கிடப்பதால் பயன்பாடற்று முட்செடிகள் படர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த கழிவறை கட்டிடமானது மதுப்பிரியர்களின் கூடாரமாக உள்ளதென அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு சில மதுப்பிரியர்கள் இங்கு மது அருந்தி விட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், அப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகையால் இந்த கிராம சேவை மைய கட்டிடத்தின் அருகில் கட்டப்பட்டு தற்சமயம் பயன்பாடற்று முட்செடிகள் படர்ந்து புதர்மண்டிக் கிடக்கும் மகளிர் கழிவறையை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

four × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi