திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா மற்றும் தெருமுனை பிரசார கூட்டம் திருவாலங்காடு, திருவள்ளூரில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மோதிலால், சுகுமார் தலைமை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், நகர செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய, நகர இளைஞரணி அமைப்பாளர்கள் நந்தகுமார், பவளவண்ணன் ஆகியோர் வரவேற்று பேசினர். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
மாணவிகள், பெண்கள் என்று அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்து உடனுக்குடன் நிறைவேற்றி தருவதில் முதலிடம் வகிக்கிறார்.இவ்வாறு பேசினார். இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகி குருதாஸ், நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், சிட்டிபாபு, ஒன்றிய செயலாளர்கள் கிறிஸ்டி, கூளூர் ராஜேந்திரன், அரிகிருஷ்ணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.