ஆர்.கே.பேட்டை, ஜூன் 26: திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்2 துணைத் தேர்வை 1024 மாணவர்கள் எழுதினர். இதில் 163 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. பிளஸ்2 பொத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணை தேர்வு நேற்று தொடங்கி ஜூலை 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 1187 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
இதில் 14 தேர்வு மையங்களில் 1024 மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இதில் 163 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. ஆர்.கே.பேட்டையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் 77 மாணவர்களில் 15 பேர் தேர்வு எழுத வரவில்லை. நேற்று நடைபெற்ற பிளஸ் 2 துணை தேர்வுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா(பொறுப்பு) தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு செய்தார். மேலும், மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தேர்வுகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.