திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் வேப்பம்பட்டில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய நிர்வாகிகள் ராஜா, மகேஸ்வரி பால விநாயகம், குட்டி (எ) பக்தவச்சலு, திலீப் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் ஆவடி சா.மு.நாசர் பேசுகையில், நீங்கள் உழைப்பு என்ற தாரக மந்திரத்தில் உழைத்தால் பதவி உயர்வு நிச்சயம். சாதாரண செயற்குழு உறுப்பினராக இருந்த நமது தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது உயர்ந்த பதவியை தனது உழைப்பின் காரணமாக அடைந்துள்ளார். தொண்டர்கள் உழைப்பை மூலதனமாக கொடுத்தால் வட்டச் செயலாளர், நகரச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை விரைவில் அடையலாம் என்றார்.
தொடர்ந்து ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பேசுகையில், நடந்தே சென்று மக்களை சந்தித்து நமது முதல்வர் ஆட்சிக்கு வந்துள்ளார். இந்த ஆட்சி 50 ஆண்டுகாலம் தொடர திமுகவினர் உழைக்க வேண்டும். மேலும், இளைஞர்களின் ஓட்டுகள் சினிமா மோகத்தால் நடிகர் விஜய் போன்றவர்களின் கட்சிக்கு போக விடாமல் திமுகவினர் தடுக்க வேண்டும் என்றார். இதில் மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், ராஜி, காயத்ரி ஸ்ரீதரன், தொழுவூர் நரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் எத்திராஜ், விமல் வர்ஷன், குமார், காஞ்சனா சுதாகர், மாநகர, ஒன்றிய,
பகுதி செயலாளர்கள் சன் பிரகாஷ், தங்கம் முரளி, நாராயண பிரசாத், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் சுரேஷ் குமார், தியாகராஜன், வினோத், ஒன்றியக்குழு துணை தலைவர் எம்.பர்க்கத்துல்லா கான், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ராமானுஜம், ருணாகரன், ஆல்பர்ட் (எ) அன்பு, வழக்கறிஞர் ஹரி, உதயகுமார், சரவணன், மோத்திஸ் ஜித்து, தெய்வசிகாமணி,
நாராயணசாமி, எட்வின், சதீஷ்குமார், கதிரவன், கஜலட்சுமி, ராஜீ, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சங்கீதா ராஜ், வேதவல்லி சதீஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேஸ்வரி சேகர், டெய்சி ராணி ஆல்பர்ட், ஜெரு ஜோன்ஸ் பிரியதர்ஷினி ஸ்ரீதர், சீனிவாசன், சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மணிகண்டன், ஜீவா, ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி சேகர் நன்றி கூறினார்.
ஆவடி மாநகர மேற்கு பகுதி:ஆவடி மாநகர மேற்கு பகுதி செயலாளர் பொன் விஜயன் ஏற்பாட்டில் திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி மாநகர மேற்கு பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று முன்தினம் மாலை பட்டாபிராம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர் கட்சியில் உள்ள அடிப்படை உறுப்பினர்,
பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றியும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் புதிய வாக்காளர் சேர்க்கை குறித்தும் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இதில் ராஜி, ரமேஷ், ஜெரால்ட், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.