புதுக்கோட்டை, ஜூன் 6: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த தூய்மை இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வளமை முத்துராமன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக்குவோம், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம், மீண்டும் மஞ்சள் பையை பயன்படுத்துவோம் உள்ளிட்ட கோஷங்களை முழங்கியவாறு சென்றனர்.
முன்னதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முடங்கிக் கிடந்த ஏராளமான பயன்பாடின்றி இருந்த பொருட்களை தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றினர். தொடர்ந்து 48 ஊராட்சி பகுதிகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள உள்ளனர். அனைவரையும் ஊராட்சி ஒன்றிய மேலாளர் நிர்வாகம் ராஜா முனியசாமி வரவேற்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார ஒழுங்கினைப்பாளர் விக்னேஸ்வரன் செய்திருந்தார். முடிவில் மேலாளர் திட்டம் மனோகரன் நன்றி கூறினார்.