புதுக்கோட்டை, ஆக.27: திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு தலைவர் துணைத் தலைவர் வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழு அமைத்தல் தேர்தல் தமிழக அரசின் உத்தரவிற்கு இணங்க பள்ளி தலைமை ஆசிரியர் சிவலிங்கம் தலைமையில் 6 முதல் 8ஆம் வகுப்பு, 9 முதல்10 வகுப்பு, 11 ,12 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளி ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் என 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அதில் தலைவர் துணைத் தலைவர் வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக வேப்பங்குடி ஊராட்சி சேர்ந்த பாரதியார் நகர் சந்தியா துணைத் தலைவராக திருவரங்குளம் ஊராட்சி சேர்ந்த மகேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.