புதுக்கோட்டை,பிப்.25: புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரி அம்மனுக்கு 36ஆம் ஆண்டு பூச்செரிதல் விழாவில் நிஜாம் பாக்கு நிறுவனத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் 36ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ராஜகோபாலபுரத்தில் உள்ள நிஜாம் பாக்கு கம்பெனி வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி தலைமையில் நிஜாம் பாக்கு அதிபர் ஹாஜி எஸ்.ஏ. சபியுல்லா மகன் ஹாஜி சையது அசாம் முகமது அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். அன்னதான ஏற்பாடுகளை அலுவலக மேலாளர் சண்முகம், சேல்ஸ் டிபார்ட்மெண்ட் மனோகரன் மற்றும் அலுவலக நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டு அன்னதானம் நடைபெற்றது இரவு அம்மனுக்கு அலங்கார பல்லாக்கில் பூக்கள் எடுத்துச் செல்லப்பட்டது.