குலசேகரம், செப்.6: திருவட்டார் அருகே உள்ள அயக்கோடு ஊராட்சி அண்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்வின்ராஜ். இவர் திருவட்டார் ஒருங்கிணைந்த வட்டார காங்கிரஸ் சேவாதள தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சேவாதள மாநில தலைவர் குங்பூ எஸ்.எக்ஸ். விஜயன் ஒப்புதலுடன் குமரி மேற்கு மாவட்ட தலைவர் ஜோசப் தயாசிங் இவரை நியமனம் செய்துள்ளார். இவர் சுமார் 35 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறார். முன்னாள் திருவட்டார் வட்டார மாணவர் காங்கிரஸ் தலைவர், இளைஞர் காங்கிரஸ் வட்டார பொதுச்செயலாளர், சிறுபான்மை பிரிவு வட்டார தலைவர், ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் வட்டார தலைவர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். இவருக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
திருவட்டார் வட்டார காங்கிரஸ் சேவாதள தலைவர் நியமனம்
previous post