உடுமலை, ஜூன்28: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி திட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்நிலையில்,ஆலாம்பாளையம் கிராமத்தில் உள்ள பூசாரி நாயக்கன் ஏரிக்கு ஜூன் 27 முதல் 29-ம் தேதி வரை இரண்டாம் சுற்று தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நேற்று அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.மானுப்பட்டி கிளை வாய்க்காலில் இருந்து இந்த தண்ணீர் திறக்கப்பட்டது. 20 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.