திருப்பூர், ஆக.12: திருப்பூர், திருமுருகன் பூண்டி பேரூராட்சியாக இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாள் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு நகராட்சி தலைவர் குமார் தலைமையில் அனைத்து கவுன்சிலர்கள் சார்பாக திருமுருகன்பூண்டியில் உள்ள திருமண மண்டபத்தில் அசைவ விருந்து பரிமாறப்பட்டது. இதில் அனைத்து ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து அசைவ விருந்து உண்டனர். இந்த நிகழ்ச்சியில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.