திருப்பூர், மே 30: திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகன் குமாரவேல் சிற்ப கலைக்கூடத்தில் கருங்கல்லில் சாமி சிலைகள் தத்ரூபமாக செதுக்கப்பட்டு, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அனுப்பப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்நிலையில் திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள் கோயிலுக்கு திருமுருகன் குமாரவேல் சிற்ப கலைக்கூடம் சார்பில் 5 1/4 அடி உயரத்தில் ஜெயன், விஜயன் சாமி சிலைகள் நேற்று உபயமாக வழங்கப்பட்டது. இதை கலைக்கூட நிறுவனர் சிற்பி குமாரவேல் கோவில் தேவஸ்தான நிர்வாகிகளிடம் வழங்கினார். முன்னதாக ஆதி முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சாமி சிலைகள் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள் கோயிலுக்கு சாமி சிலைகள் கலைக்கூடம் உபயம்
83