நாகப்பட்டினம், ஜூன் 11: திருமருகல் அருகே மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1ம் தேதி பூச்செரிதல், கஞ்சி வார்த்தல், காப்பு கட்டுதலுடன் தொடங்கி சிறப்பு பூஜை, அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி தீமிதி உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் வீதியுலா நடந்தது. இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருமருகல் அருகே மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா
0