திருமயம், மே 31: திருமயம் துணைமின் நிலையத்தில் இன்று(31ம் தேதி) மாதந்திர பராமாரிப்பு பணி நடைபெற உள்ளது. அதுசமயம் திருமயம் துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் திருமயம், மணவாளன்கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கண்ணங்காரைக்குடி, ஊனையூர், சவேரியர்புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூர், கோனாபட்டு, துளையானூர், தேத்தாம்பட்டி, கே.பள்ளிவாசல், பி.அழகாபுரி, நெய்வாசல், நல்லூர், வாரியப்பட்டி, ராங்கியம், கொல்லக்காட்டுப்பட்டி, கண்ணனூர், மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, வி.லெட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை, பிஎச்இஎல் நிறுவனம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருமயம் கோட்ட உதவி செயற்பொறியாளர் அசோக் குமார் (பொ) வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.