திருமயம்,ஆக.19: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மகமாயிபுரம் ஆர்ச் பகுதியில் மின்விளக்கு வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அறிந்த திருமயத்தில் பிரபல மருத்துவர் ராஜசேகர பாண்டியன் அவரது சொந்த செலவில் உயர் கோபுர மின்விளக்கு மக்கள் நலன் கருதி அமைத்துக் கொடுக்க முன் வந்தார். இதன் அடிப்படையில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் சோலார் வசதியுடன் கூடிய உயர்மின் கோபுர விளக்கு கடந்த வாரம் அமைக்கப்பட்டது. இதனை மருத்துவர் ராஜசேகர பாண்டியன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் கலந்துகொண்ட கிராம மக்கள் மக்களின் கோரிக்கையை ஏற்று உயர் கோபுர மின் விளக்கு அமைப்பு கொடுத்த மருத்துவர் ராஜசேகர பாண்டியனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.