திருமயம்,மே8: திருமயம் அருகே வயலுக்குள் சுற்றித்திரிந்த மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மாவூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பவருக்கு சொந்தமான மாவூர் வயலில் நேற்று காலை பெண்கள் களை எடுத்து கொண்டிருந்தனர். அப்போது வயலுக்கு சுமார் 6 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று சுற்றித்திரிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்த தீயணைப்புத் துறையினர் மலைப்பாம்பை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.