தேவகோட்டை, ஆக.23: தேவகோட்டை நகரச்சிவன் கோவில் தெற்கு தெருவில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று சுப நிகழ்ச்சி நடை பெறுவதாக இருந்தது, அதற்கு நேற்று மாலை 4 மணியளவில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. அப்போது சமையலறையில் எதிர்பாராத விதமாக தீ பற்றியது. அந்த தீயானது மண்டபத்தின் ஒரு பக்கம் முழுவதும் பற்றி எரிந்தது.
அதில் உள்ளே இருந்த ஏர் கூலர், ஏர்கண்டிஷன் மற்றும் மேலே போட்டு இருந்த டெக்கரேஷன் அனைத்தும் தீயில் கருகி சாம்பலானது, இது குறித்து தேவகோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, நிலைய அலுவலர் முனீஸ் குமார் தலைமையில் தீயணைப்புத்துறை விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் உள்ளே இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து தேவகோட்டை டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.