பெரியகுளம், ஜூலை 25: பெரியகுளத்தில் திருமண ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியைக் கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து பிரகாஷ்(31). இவர், 19 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவியிடம், திருமண ஆசை வார்த்தைக் கூறி தகாத உறவு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கர்ப்பமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், முத்து பிரகாஷின் தந்தை பாலு மற்றும் அவரது தாயார் ஈஸ்வரியிடம் நியாயம் கேட்டுள்ளனர்.அப்போது மாணவியின் பெற்றோரை அவர்கள் அவதூறாக பேசியதுடன், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர், பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் முத்து பிரகாஷ், பாலு, ஈஸ்வரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, முத்து பிரகாஷை போலீசார் கைது செய்தனர்.