குடித்து தற்கொலை நெல்லை,ஜூன் 16: கோவை மாவட்டம் கருமத்தம்பாளையம் குமரன்நகரைச் சேர்ந்த பலவேசம் மகள் கிருத்திகா (21). இவருக்கும் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள வைராவிகுளம் நாராயணசாமி கோயில் தெருவைச் சேர்ந்த சேகர் என்பவருக்கும் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இருவரும் கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்னையால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்து வந்துள்ளனர்.
இதனால் மனவேதனையில் இருந்த கிருத்திகா கடந்த 11ம் தேதி வீட்டில் வயலுக்குப் பயன்படுத்த வைத்திருந்த பூச்சிக்கொல்லியை குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் கிருத்திகாவை உடனடியாக மீட்டு கல்லிடைக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் கிருத்திகா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிருத்திகாவின் தந்தை பலவேசம் அளித்த புகாரின் பேரில் மணிமுத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அம்பை டிஎஸ்பி சதீஷ்குமார் விசாரணை நடத்தினார். திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் மேலும் இது தொடர்பாக சப்கலெக்டர் (பொ) சிவகாமசுந்தரி விசாரணை மேற்கொள்கிறார்.