பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 11: பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி அருகே போதக்காடு மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்(31), கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பவித்ரா(23) என்பவருக்கும், கடந்த 4ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கடந்த 7ம் தேதி காலை, பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள வங்கிக்கு சென்று வருவதாக கூறி சென்ற பவித்ரா, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சிவக்குமார், உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து, பொம்மிடி போலீஸ் ஸ்டேஷனில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பவித்ராவை தேடி வருகின்றனர்.
திருமணமான இளம்பெண் மாயம்
0
previous post