திருமங்கலம், ஜூலை 7: திருமங்கலம் – ராஜபாளையம் இடையே புதியதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையில் விளக்குகள் எதுவும் எரியாததால், மின் விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருமங்கலத்திலிருந்து கேரளா மாநிலம் கொல்லம் வரை அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை, தற்போது நான்குவழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதில் திருமங்கலம் – ராஜபாளையம் இடையே பல்வேறு பகுதிகளில் மேம்பாலம் அமைத்தல், சாலை வளைவுகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
திருமங்கலம் ஆலம்பட்டியை கடந்து புதுப்பட்டி போகும் வரை புதிய சாலையில் பல்வேறு இடங்களில பணிகள் நடைபெறுவதால் ஆங்காங்கே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த இடத்தில் சாலை பிரிகிறது என்பது குறித்து போதுமான அறிவிப்பு பலகைகள் இல்லை.இந்த சாலையில் போதிய எண்ணிக்கையில் விளக்குகள் அமைக்கப்படாமல் இருப்பதால் இரவில் போதிய வெளிச்சமின்றி வாகன ஓட்டிகள் சாலையை கண்டறிந்து செல்வதில் சிக்கல் எழுகிறது.