திருமங்கலம், ஆக. 23: திருமங்கலம் பிகேஎன் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியின் 9ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. பசுமையை நோக்கி என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடைபெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற வனப்பாதுகாவலர் டாக்டர் சேகர் கலந்து கொண்டார். பத்ரகாளி மாரியம்மன் தேவஸ்தான் டிரஸ்டி ரமேஷ் பாபு, நாட்டாண்மை நல்லதம்பி, ஜெகநாதன், பொன்னுலிங்கம், வித்யாசாலா சங்ககமிட்டி தலைவர் பூமண்டலம் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
பள்ளி தலைவர் கண்ணன், செயலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. ஒலிம்பிக் தீபம் ஏற்றபட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. விளையாட்டு ஆசிரியை காயத்ரி விளையாட்டு அறிக்கையை வாசித்தார். விழாவில் மாணவர்களின் தொடர் ஓட்டபந்தயம், எரிபந்துபோட்டி, கபடி போட்டி, சிலம்பம், யோகா, அம்பு எறிதல், கராத்தே உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதே போல் பெற்றோர் மற்றும் நிர்வாக குழுவினரை சிறப்பிக்கும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பிகேஎன் வித்யாலயா முதல்வர் காருண்யா சந்திரகலா போட்டிகளை ஒருங்கிணைத்திருந்தார்.