திருமங்கலம், நவ.1: திருமங்கலம் பகுதியில் தொடர் மழைக்கு இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. வருவாய்த் துறையினர் சேதமதிப்புகளை சேகரித்து வருகின்றனர். திருமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் பெரியபொக்கம்பட்டி கிராமத்தினை சேர்ந்த சுந்தர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இதேபோல் திருமங்கலத்தினை அடுத்த அம்மாபட்டி கிராமத்தில் நேற்று காலை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முத்துலட்சுமி வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. சுவர் அருகே யாரும் இல்லாத காரணத்தால் காயங்கள் ஏற்படவில்லை. இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி சேதமதிப்புகளை சேகரித்து வருகின்றனர்.