திருமங்கலம், ஜூன் 6: திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மரங்கள் வளர்ப்பதின் பலன்கள் குறித்து மாணவர்கள் பங்கேற்ற நாடகம் நடைபெற்றது. மேலும் ஓவியம், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் சாந்தி தலைமை வகித்தார்.
மாணவர் சட்டமன்றம் துவக்கப்பட்டு மாணவர்களில் முதலமைச்சர், அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நிகழ்ச்சியில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியை ஆசிரியர்கள் ரேவதி, ஜெயசீலி, கண்ணன், ஷேக் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். சுற்றுச்சூழல் தினத்தினையொட்டி பள்ளி சார்பில் அனைத்து மாணவஇ மாணவிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.