திருமங்கலம், செப். 3: திருமங்கலம் அருகே மேலக்கோட்டை கிராமத்தில், நேற்று டூவீலரில் படுத்திருக்கும் நிலையில் டிரைவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமங்கலம் அருகேயுள்ள மேலக்கோட்டை கிராமத்தினை சேர்ந்தவர் மகாலிங்கம்(50). இவர் கொம்பாடி கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று பணிமுடித்து அதிகாலை 5.30 மணிக்கு மேலக்கோட்டைக்கு டூவீலரில் திரும்பியுள்ளார்.
மேலக்கோட்டை பஸ்ஸ்டாப் அருகே வந்த போது வண்டியை நிறுத்தி செல்போனில் பேசிய அவர், சிறிது நேரத்தில் மயங்கி டூவீலரிலேயே படுத்த நிலையில் உயிரிழந்தார். டூவிலரில் தூங்கிய நிலையில் காணப்பட்ட இவரை, அக்கம்பக்கத்தினர் எழுப்பியுள்ளனர். அப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து விஏஓ ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.