மதுரை: திருமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உளுந்து மற்றும் பாசிப்பயிறு அறுவடை துவங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் நலன் காக்கும் பொருட்டு திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்றும் இக்கூடம் செயல்பட்டது. திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரை 9025152075 எண்ணில் தொடர்பு கொண்டும் விபரம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.