திருப்போரூர், ஆக.29: வங்கதேசத்தில் இந்துக்கள் பாதிக்கப்படுவதாக கூறி திருப்போரூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் நேற்று முன்தினம் திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்காக, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பேசியதாகவும், உயர்நீதி மன்றத்தின் நிபந்தனைகளை மீறியதாகவும் இந்து முன்னணியைச் சேர்ந்த மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ராஜசேகர், ஜெய்சங்கர், பாலமுரளி உள்ளிட்ட 13 பேர் மீது திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.