திருப்பூர், ஆக.12: திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படையில் ஏராளமான வீரர்கள் உள்ளனர். அவர்களை போலீசார் ஜனாதிபதி,பிரதமர்,கவர்னர் ஆகியோர் வருகையின் போதும், கோயில் திருவிழாக்கள்,தேர்திருவிழா, அரசியல் கட்சியின்பொதுக்கூட்டங்களின் போது பாதுகாப்பு பணியின் போதும், இதர பணிகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஊர்காவல் படை வீரர்கள் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. அந்த காலி பணியிடங்களுக்கு மொத்தம் 64 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் நேர்காணலில் 56 பேர் பங்கு பெற்றனர். அதில் 41 ஆண்கள், 16 பெண்கள் என மொத்தம் 56 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நேர்காணலில் கூடுதல் துணை கமிஷனர் மனோகரன், போக்குவரத்து உதவி கமிஷனர் சுப்புராமன், ஊர்க்காவல் படை எஸ்.ஐ குருசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.