திருப்பூர், டிச.18: திருப்பூர் தாராபுரம் சாலை அரண்மனை புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. பூக்கள் மாதமாக இம்மாதம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு முன்பருவ கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்காக வகுப்பறையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயா மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இதில், எளிதில் கிடைக்கும் மலர்கள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், தாங்களாகவே ஓவியங்கள் வரைந்து அதனை மலர்களால் அலங்கரித்து வகுப்பறையில் காட்சிப்படுத்தியிருந்தனர். மலர்களில் பட்டாம் பூச்சிகள் தேனீக்களை சேகரிப்பது, காகித மலர்களால் பூங்கொத்து உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மலர் கண்காட்சியை காலை முதல் மாலை வரை மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் பார்வையிட்டனர்.