திருப்பூர், செப்.6: திருப்பூர் பள்ளிகளில் ஆசிரியர் தினம் நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைபள்ளியில் மாணவிகள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூ வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் கே.எஸ்.சி அரசு பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சிப் பள்ளி, பழனியம்மாள் மாநகராட்சிப் பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.