திருப்பூர், நவ.16: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு எந்திரம் களத்திற்கே வரும் என்பதின் அடிப்படையில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டமானது தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வருகிற 20ம் தேதி காலை 9 மணி முதல் 21ம் தேதி காலை 9 மணி வரை திருப்பூர் தெற்கு வட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளார்கள்.அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிதல், அரசு விடுதிகள், பூங்காக்கள் உள்ளிட்வைகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.