திருப்பூர், ஆக.20: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:திருப்பூர் மாவட்டத்தில் வரும் 23ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அறை எண் 240ல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்பார்கள். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனுக்களை வழங்கவும், பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் ஒரு சஙகத்துக்கு ஒருவர் வீதம்,
தங்களது கோரிக்கைகளை தொகுத்து மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அமைக்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.