நாகப்பட்டினம், ஜூலை 6: வேளாங்கண்ணி அருகே திமுக உறுப்பினர் சேர்க்கையை அமைச்ர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.
மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு எனும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுகவினர் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாகப்டடினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கிவைத்தார். மாவட்ட செயலாளர் கவுதமன், ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயலாளர் மரியசார்லஸ் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.