திருப்புவனம், ஆக.15: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கட்சியின் வளர்ச்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். தொடர்ந்து புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது.நேற்று திருப்புவனத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாமை சிவகங்கை வடக்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் துவக்கிவைத்தார்.
மாநில தொண்டரணி தலைவர் அயோத்தி முன்னிலை வகித்தார். செப்டம்பர் மாத இறுதிக்குள் பேரூராட்சியின் 18வார்டுகள், திருப்புவனம் இரண்டு ஒன்றியப் பகுதிகளில் உட்பட அனைத்து பகுதிகளிலும் புதிய உறுப்பினர் சேர்க்கையை நடத்தி முடிக்கவேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியிலும் ஒன்றியத் தலைவர்கள் மாங்குடி மணி,மணல் மேடு ராஜா, நகர் தலைவர் பாரத் ராஜா, மடப்புரம் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜா, முத்துமாரி, முருகேசன்,ரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர்.