திருப்புவனம், ஏப்.3: திருப்புவனத்தில் இந்தியா கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம், திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் நடந்தது. கூட்டுறவு அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை நகர் காங்கிரஸ் தலைவர் நடராஜன் வரவேற்றார். இதில் ப.சிதம்பரம் எம்பி பேசினார்.
இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன்,கடம்பசாமி, ஒன்றிய குழு துணைத் தலைவர் மூர்த்தி, பேரூராட்சி துணைதலைவர் ரகுமத்துல்லாகான், நகர் செயலாளர் நாகூர் கனி, மாவட்ட இளைஞர் அணி பொற்கோ, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அச்சங்குளம் முருகன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சஞ்சய், பச்சேரி சிஆர்.சுந்தர்ராஜன், வட்டார தலைவர்கள் மாரிமுத்து, செந்தில்,பாட்டம் சிவா, பொதுக்குழு உறுப்பினர் ஜெயசந்திரன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.