திருப்புத்தூர், அக்.4: திருப்புத்தூர் ஆறுமுகம் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. திருப்புத்தூர் ஆறுமுகம் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு பணி திட்ட முகாமை கடந்த செப்.27ல் பள்ளி தலைமை ஆசிரியர் சிவசைலம் துவங்கி வைத்தார். தொழிற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், கணினி ஆசிரியர் பாண்டியன், உடற்கல்வி ஆசிரியர்கள் இளஞ்சூரியன், ஸ்டீபன் லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மாணவர்களுக்கு நாட்டு நலப்பணி திட்டம் பற்றிய கருத்துக்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு கவிதை, ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நேற்று திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோவில் தெப்பக்குளமான சீதளிக் குளத்தைச் சுற்றிலும் வளர்ந்துள்ள புதர் செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட பொறுப்பு ஆசிரியர் ஜெயமேரி செய்திருந்தார்.