திருப்பரங்குன்றம், அக். 18: திருப்பரங்குன்றத்தில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் குமரகுருபரன் உத்தரவின் பெயரில் வட்டார மருத்துவர் டாக்டர் தனசேகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அழகுமலை, ஊராட்சி செயலாளர் ராஜாமணி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவினர் நேற்று விரகனூர் உள்ளிட்ட இடங்களில் டெங்கு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள கடைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் கடைகளில் பழைய டயர், உரல் போன்றவற்றில் மழைநீர் தேங்கி டெங்கு கிருமிகள் இருந்தன. அந்த கிருமிகளை தூய்மை பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் துணையுடன் அப்புறபடுத்தினர். பின்னர் டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்தியை தடுப்பது குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்து கூறினர். மேலும் ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளாத கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.