திருப்பரங்குன்றம், ஆக. 26: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை சேர்ந்தவர் ராஜராஜன் (31). இவர் திருமணம் செய்து வைக்க சொல்லி பெற்றோருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, வீட்டை விட்டு வெளியேறி வந்து மதுரை முத்துப்பட்டியில் வீடு எடுத்து தங்கி ஓட்டலில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் ராஜராஜனின் சகோதரருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தகவல் அவருக்கு மேலும் மனஉளைச்சல் அளித்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று திருப்பரங்குன்றத்தில் உள்ள சரவண பொய்ைக குளத்திற்கு வந்த ராஜராஜன், யாரும் இல்லாத நேரத்தில் தண்ணீரில் குதித்த தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அவரை உடலை மீட்டனர். திருப்பரங்குன்றம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.